முன்னுரைசுதந்திரத்திற்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஒருசாரார் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் மறுசாரார் அப்படிப் பிரிக்கக் கூடாது என்றும் கூறினர். அம்பேத்கார் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு இந்தியா சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்படவேண்டும் என்றதோடு, 'ஒரே மொழி - பல மாநிலங்கள்' என்ற கோட்பாட்டை முன்வைத்தார். “மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது” -சர்தார் பட்டேல்ஆனால், இறுதியில் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிப்பது என்று முடிவானது.அம்பேத்கார் கோட்பாடு ஒருவேளை அன்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால், தென் தமிழகம் இவ்வளவு பின்தங்கிய நிலையை எய்தியிருக்காது, மூன்று பாராளுமன்றத் தொகுதிகளையும் காலப்போக்கில் இழந்திருக்காது. தென் தமிழகம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதோ தேச விரோதப் போக்காக நினைத்துக்கொண்டு பிரச்சினையை அணுகினால் அதன் தேவையும் தெரியாது, அதில் உள்ள நியாயமும் புரியாது. தமிழகம் இரண்டாகப் பிரிந்தாலும் தமிழால் அது என்றும் இணைந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. எனவே, அதனை எதிர்ப்பதற்கு தமிழ் என்றும் காரணமாக இருக்காது!